புதிய முயற்சிகள் வேண்டாம்
2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒரு பக்கம் தெய்வ அனுகூலம், இன்னொரு பக்கம் தெய்வம் விலகி நிற்க வேண்டிய காலம் இரண்டும் இருக்கிறது. அதனால் உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை நன்கு வழிபாடு செய்யுங்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம், பொருள் இருக்கும். பணம் யாருக்கும் கடன் கொடுத்தால் அது திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. முன்னோர்களுடைய சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள், எதிர்பாராத விதமாக பென்ஷன், பிஎஃப், கிராஜுவிட்டி, அரியர்ஸ் பணங்கள் வருவதற்கான சூழ்நிலைகள் நிறைய உண்டு. குழந்தைகளை விட்டு பிரிந்து இருப்பதற்கான காலங்கள் இருக்கின்றன. புதிய முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் வேண்டாம். பெரிதாக யாரையும் நம்பாதீர்கள். எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்பாக இருங்கள். போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் எச்சரிக்கையாக இருங்கள். உறவுகளிடம் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள் ஏற்பட்டு விலகும் என்பதால் அவர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். அம்மா, அப்பா இருவரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் குலதெய்வம், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.