புதிய முயற்சிகள் வேண்டாம்

Update:2025-03-11 00:00 IST

2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு இருக்கிறது. முன்னோர்களுடைய சொத்துக்கள் கிடைக்கும். கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு உண்டு. ஒருவருக்கு கடன் கொடுப்பதற்கு முன்பாக யோசித்து செய்யுங்கள். அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் செய்யுங்கள். கணவன் - மனைவி உறவில் சண்டை சச்சரவுகள் இருக்கும். கவனமாக இருங்கள். தொழில் பரவாயில்லை. சொந்தமாக தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வரவுகள் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு செலவுகள் இருக்கிறது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அவசரம், அவசியம் இருந்தால் தவிர பயணத்தை தவிருங்கள். உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள், போராட்டங்கள், மனவருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உறவுகள் மற்றும் நட்பு விஷயத்தில் கவனமாக இருங்கள். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகள், மன உளைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் சிவன் வழிபாடு, குறிப்பாக பெருமாள் தரிசனம் செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்