அளந்து பேசுங்கள்

Update:2025-04-15 00:00 IST

2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலம், தெய்வத்தால் விலகி இருக்க வேண்டிய காலம் இரண்டும் இருக்கிறது. அதனால் எல்லா விஷயங்களிலும் நன்கு யோசித்து செயல்படுங்கள். பண வரவு, பொருள் வரவு இருந்தாலும் அதற்கு மேல் செலவினங்கள் இருக்கிறது. தேவையில்லாத பேச்சுக்களை தவிருங்கள். பேசுவதை அளந்து பேசுங்கள். நீங்கள் செய்யும் கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் உண்டு. வாழ்க்கையில் யாரையாவது ஒருவரை நம்பித்தான் ஆக வேண்டும். நம்புங்கள் நல்லதே நடக்கும். ஒருபக்கம் உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள்; இன்னொரு பக்கம் நன்மைகள் இருக்கிறது. உயர்கல்வி பரவாயில்லை. வேலையில் பிரச்சினைகள், போராட்டங்கள் இருந்தாலும், உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அவசரம், அவசியம் இருந்தால் தவிர லோன் வாங்காதீர்கள். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்