பெண்கள் விஷயத்தில் கவனம்
2025 ஜனவரி 28-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் நினைத்த காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்பு, எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வருவதற்கான சூழ்நிலைகள் பரவாயில்லாமல் உள்ளது. இருந்தாலும் நீங்கள் பெரிய அளவில் முயற்சி எடுத்தால் மட்டும்தான் அந்த வெற்றியை முழுமையாக அனுபவிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். தேவையற்ற செலவினங்கள், விரயங்கள், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. புதிய காதல் மலரவும், ஏற்கனவே உள்ள காதல் பிரேக் அப் ஆகவும் வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பரவாயில்லை. பெண்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். பெண்களால் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள் இருக்கிறது. இடம், வீடு, மனை, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. எல்லாவற்றிலும் திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். வேலை, வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் எங்கெல்லாம் சிவாலயங்கள் இருக்கிறதோ அங்கு அம்பாள் தரிசனம் செய்யுங்கள்.