எதிர்பாராத பண வரவு

Update:2024-08-13 00:00 IST

2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கிரக ரீதியாக இந்த வாரம் நல்லதொரு முடிவு எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கு தைரியம், தன்னம்பிக்கை வேண்டும். அவற்றை கிரகங்கள் உங்களுக்கு கொடுக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையில் நீங்கள் யாரை நம்பியிருக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு ஏதோவொரு விதத்தில் உதவி செய்வார்கள். யாரை தொடர்பு கொள்ள நினைக்கிறீர்களோ அவர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை இருக்கிறது. விற்பனையாகாத சொத்துக்கள் இருந்தால் நல்ல விலைக்கு போகும். வீடு, இடம் மாற்றங்கள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மகசூல் நன்றாக இருக்கிறது. லாபம் பரவாயில்லை. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. அந்த வேலையில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். நீங்கள் கடின முயற்சிகள் எடுத்திருந்தால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் செய்பவர்களுக்கு பரவாயில்லாமல் லாபத்தை கொடுக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்வதில் நிறைய தடைகள் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், புகழ், அந்தஸ்து கூடும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களைவிட்டு பிரிந்துபோக வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். எதிர்பாராத பண வரவு, பொருள் வரவு இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் மகா கணபதியை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்