காதல் வெற்றி அடையும்

Update: 2024-09-09 18:30 GMT

2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுக்கான தெய்வ அனுகூலம் வலுவாக உள்ளது. யாரெல்லாம் காதிலிக்கிறீர்களோ உங்களின் காதல் வெற்றிபெற்று திருமணத்தில் முடியும். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் உங்களின் கையில் பணம், தனம், பொருள் என்பது இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளது. இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை, நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி ஆகியவை இருக்கின்றன. எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். வேலை நிமித்தமான பயணம், அந்த பயணத்தால் நன்மையும் இருக்கிறது. கல்வியை பொறுத்தவரை நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த நல்ல விற்பனை மற்றும் வருமானம் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் அத்தனையும் இருக்கிறது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள், சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை சும்மா இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கிறது. சொந்த தொழிலும் பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும் துர்க்கையையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்