நினைப்பது நடக்கும்

Update:2024-11-05 00:00 IST

2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும். உங்கள் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள். உங்களுக்கு பிரச்சினைகள், போராட்டங்கள், நிம்மதியற்ற சூழ்நிலைகள் ஏற்படும்போதெல்லாம் அதை சரி செய்வதற்கு எப்போதும் யாராவது வருவதுபோல் இந்த வாரமும் வந்து உதவி செய்வதற்கான வாய்ப்புள்ளது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கும் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரத்தில் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. எதிர்பாராத டூர், டிராவல் இருக்கிறது; அது உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். இந்த வாரம் குழந்தைகளை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் இரண்டு தரப்பிலுமே லாபம் அடைவீர்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். அரசாங்கத்தால் நன்மைகள் ஏற்படும். வேலை, வாய்ப்புகள் சுமாராக இருக்கிறது. அதனால் உங்கள் வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சக தொழிலாளர்கள், உயர் அதிகாரிகளிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கொஞ்சம் காத்திருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் சனி பகவானை அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்