தொழிலில் லாபம்
2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மெண்ட் இருக்கிறது. உங்கள் காதல் வெற்றியடையும். முறிந்த காதல் மீண்டும் சேரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உங்களை அறியாத ஈடுபாடு, என்டெர்டெயின்மெண்ட் கூடும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம் உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களுடைய பணம், பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். பிசினஸ் விரிவடைய அல்லது லாபத்தை கொடுக்க வாய்ப்புள்ளது. தற்போது கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், தொழிலில் பெரிய அளவில் வர நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், திருப்தியற்ற மனநிலையில் இருக்க வேண்டிய காலகட்டங்கள் இருக்கிறது. வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை ஒருபக்கம் நன்றாக உள்ளது. இன்னொருபக்கம் சுமாரான பலன்கள். பணி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.