முயற்சிகள் வெற்றியடையும்

Update:2024-11-12 00:00 IST

2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் ஆகியவை செய்பவர்களுக்கு தொழில் நன்றாக உள்ளது. டிரான்ஸ்போர்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங், மீடியா ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல புகழ், வருமானம், சம்பாத்தியங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும்; வெற்றி அடையும். நீங்கள் எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வருவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ; அதே அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். எந்தவொரு வேலையையும் நாளைக்கு என்று ஒதுக்கி வைக்காமல் உடனே செய்யுங்கள். உங்கள் வேலை வாய்ப்புகள் சுமாராக உள்ளன. அதனால் வேலையில் கவனம் செலுத்துங்கள். யாரையும் நம்பாதீர்கள். சக தொழிலாளர்களே பிரச்சினைக்குரியவர்களாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். அதனால் கவனமாக இருங்கள். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்களும் அதில் கலந்துகொள்ளுவீர்கள். எதிர்பாராத தெய்வ தரிசனம் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கடன் வாங்காதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போக வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் துர்க்கையையும், காளியையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்