புதிய காதல் மலரும்

Update:2024-09-03 00:00 IST

2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏதும் இல்லை. உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருக்கும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். முன்னேற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் உள்ளன. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றிலும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானங்களும் கூடும். புதிதாக காதல் மலரும். சொந்த தொழிலும் நன்றாக உள்ளது. பெரிய அளவில் தொழில் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாரத்திலேயே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். எதிர்பாராத பொருள் வரவு, தனவரவு, இருக்கிறது. முன்னோர்களின் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகள் உருவாகும். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். அப்பாவின் அன்பு, ஆதரவு எதிர்பார்ப்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத தெய்வம் மற்றும் ஆலய தரிசனம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த வாரம் முழுவதும் துர்கை மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்