உறவுகளால் பிரச்சினைகள்

Update:2024-10-22 00:00 IST

2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் சுமார். முயற்சிகள் வெற்றி பெறுவதில் தடைகள் இருப்பதால், புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள், போராட்டங்கள் ஏற்பட்டு விலகும். உறவினர்கள் பிரிந்து போவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. இளைய சகோதர - சகோதரிகளால் நிம்மதியற்ற சூழ்நிலைகள் உண்டாகும். நீங்கள் நினைக்கும் காரியங்கள் தாமதம் ஆனால் கவலைப்படாதீர்கள். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள். அது மிக மிக முக்கியம். கல்வியில் கவனம் செலுத்துங்கள். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விலை இருக்கிறது. அதிலும் விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. புதிய காதல் உண்டாகவோ, உங்கள் காதல் விஷயங்களில் சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படவோ வாய்ப்புள்ளது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் சுமாரான அளவிலேயே முதலீடு செய்யுங்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். லாபம் கிடைக்கும் என்பதற்காக கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கூடும். வேலையை பொறுத்தவரை உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவார்கள். உயர்கல்வியை தொடர வாய்ப்புள்ளது. வாய்ப்பு இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்விக்காக வெளியூரோ, வெளிநாடோ போக வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் பைரவரையும், துர்க்கையையும் பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்