முயற்சிகள் எதுவும் வேண்டாம்

Update:2024-09-24 00:00 IST

2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கிறது. யாரையும் நம்பி செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுங்கள். யாருடைய கருத்துக்களையும் கேட்காதீர்கள். எதுவும் உங்களுக்கு ஒர்கவுட் ஆகாது. கிரக நிலைகள் நமக்கு சாதகமாக இல்லாததால் பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். யாரையும் நம்பி எந்த விஷயத்திலும் இறங்குவதற்கான சூழலும் இல்லை. அதனால் கவனமாக இருங்கள். நீண்ட நாட்களாக விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போவதற்கான வாய்ப்பு; அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இளைய சகோதர - சகோதரிகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள்; அல்லது அவர்களை விட்டு பிரிந்து இருப்பீர்கள். உறவுகள் விஷயத்திலும் இதேதான் நிலவும். இந்த வாரத்தில் உங்கள் கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் லாபம் இருக்கிறது. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதல் இருந்தால் அந்த காதல் வெற்றியடையும். உங்கள் தொழில், கௌரவம், அந்தஸ்து, புகழ் அகியவற்றை கொடுத்தாலும், வருமானத்தை கொடுக்குமா? என்றால் சுமாராகத்தான் உள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வர வாய்ப்பு இல்லை. இந்த வாரம் முழுவதும் பைரவர் மற்றும் கருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்