குழந்தை பாக்கியம்

Update:2024-08-27 00:00 IST

2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகளை பொறுத்தவரை நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம் கையில் இருக்கும். சொந்த தொழில் நன்றாக இருக்கும். கூட்டுத்தொழிலில் நீங்களும், பார்ட்னரும் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். பெரிய அளவில் தொழில், ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டும், தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் நன்றாக உள்ளன. நீங்கள் நினைப்பது நடக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். வீடு, இடம் மாற்றங்கள் உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் இருந்தால் அது நல்ல விலைக்கு போகும். அதேநேரம் புதிய சொத்துக்கள் வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது. கல்வி நன்றாக உள்ளது. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மைகள் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சாதாரண அளவில் செய்யுங்கள். நல்லதொரு லாபம், வருமானம் இருக்கிறது. கலைத்துறையில் இருந்தால் பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கை பிரமாதம். விளையாட்டுத் துறையில் இருந்தால் நல்லதொரு முன்னேற்றம் உண்டு. வேலையை பொறுத்தவரை பணி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். வேலையில் சின்ன சின்ன பிரச்சினைகள் குறையும். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்