உடல் ஆரோக்கியத்தில் கவனம்
2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிந்தனை உங்களுக்கு இருக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். ஓரளவு ரிட்டன்ஸ் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானம் கிடைக்கும். அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. உடன் பணியாற்றுபவர்கள் இடமும், உயர் அதிகாரிகளிடமும் விட்டுக்கொடுத்து போங்கள். கிடைத்த வேலையிலும் சொல்ல முடியாத பிரச்சினைகள் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் செய்யுங்கள். ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. ஆனாலும், செலவினங்கள் நிறையவே உண்டு. காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். இந்த வாரம் முழுவதும், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.