கவனம், நிதானம் தேவை

Update:2024-11-26 00:00 IST

2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நிலையான சொத்து வாங்க நினைப்பவர்கள் வாய்ப்பிருந்தால் அதில் முதலீடு செய்யுங்கள். ஓரளவுக்கு நல்லது. இல்லையென்றால் தேவையில்லாத செலவினங்கள், விரயங்கள், நஷ்டங்கள், வைத்தியச் செலவுகள் ஆகியவை ஏற்படலாம். தொழில் சுமாராக இருக்கிறது. லாபம் வருவது மாதிரியான ஒரு தோற்றம். ஆனால், இல்லை. கூட்டுத்தொழில் செய்தால் பார்ட்னருக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் அல்லது பார்ட்னர் லாபம் அடைவார். கல்வியில் சின்ன சின்ன தடைகள் இருப்பதால் கவனம் தேவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உங்கள் மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காக செலவு செய்ய வேண்டிய வாரமாக உள்ளது. அவர்கள் உங்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வேலை வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்துங்கள். அரசு, தனியார் என எந்த துறையில் பணியாற்றினாலும் நிதானமாக இருங்கள். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து போங்கள். இல்லையென்றால் நீங்கள் பார்க்கும் வேலையில் தேவையில்லாத மனவருத்தங்கள், பிரச்சினைகள் அல்லது நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எது எப்படி இருந்தாலும் உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். ஷேர் மார்க்கெட் போன்ற எந்த யூக வணிகங்களிலும் முதலீடு செய்யாதீர்கள். இந்த வாரம் முழுவதும் துர்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.    

Tags:    

மேலும் செய்திகள்