புதிய காதல் மலரும்

Update: 2024-12-30 18:30 GMT

2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றியடையும். முறிந்த காதல் மீண்டும் சேரும். தெய்வ தரிசனம் அமையும். உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். எல்லாவிதமான யூக வணிகங்களும் சுமாராக இருப்பதால் ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் புகழ், அந்தஸ்து கூடும். சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டும் சுமாராக உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி துறைகளிலும் உங்கள் தொழில் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. கையில் பணம், தனம் இருந்தால் கூட அது எளிதாக செலவாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்களின் பணம், பொருள் மொத்தமாக முடங்கிக்கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். நீங்கள் பார்க்கும் வேலையில் முன்னேற்றம் இருந்தால் கூட திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். கிடைத்த வேலையை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் செய்யுங்கள். கடன் மற்றும் நோய் குறைய வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும், முருகன் துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்