குழந்தைகளால் பிரச்சினை
2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாகவும், வெற்றியையும் தரும். பெரிய விஷயங்கள் எதிர்பார்த்து காத்திருந்தால் நன்மையாக முடியும். நீங்கள் உழைத்து சம்பாதிக்க கூடிய பணம் உங்கள் கையில் நிற்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் தேவையில்லாத செலவினங்கள் இருக்கிறது. எப்போதெல்லாம் பிரச்சினைகள், தேவையில்லாத மன குழப்பங்கள், போராட்டங்கள் இருக்கிறதோ அப்போதெல்லாம் அதை தீர்த்து வைப்பதற்கு யாராவது வருவார்கள். நிலம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளால் தேவையற்ற செலவினங்கள், மனவருத்தங்கள், பிரச்சினைகள், போராட்டங்கள் ஆகியவை இருக்கிறது. யாருக்கு கடன் கொடுத்தாலும் பணம் திரும்பி வருவது போன்ற ஒரு தோற்றம். ஆனால், வர வாய்ப்பு இல்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. சொந்த தொழில் செய்தால் தொழில் தகராறு தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் அது வரும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்தால் பரவாயில்லாமல் இருக்கிறது. மூத்த சகோதரிகளால் நன்மை உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.