பிரிந்த காதல் சேரும்

Update: 2024-05-20 18:30 GMT

2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். கையில் எப்போதும் பணம், தனம் இருந்து கொண்டே இருக்கும். புதிதாக காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால், அந்த காதல் வெற்றியடையும். பிரிந்த காதல் மீண்டும் சேரும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். என்ன நினைக்கிறீர்களோ அது நடப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் உதவி செய்வார்கள். எதிர்பாராத நட்பால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் பிசினஸ் போன்ற தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம், லாபம் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை இதுவரை இருந்த பணிச்சுமை மற்றும் டென்ஷன் குறையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். எதிர்பாராத பண வரவுகள், தனவரவுகள், பொருள் வரவுகள் உண்டு. இந்த வாரம் முழுவதும் துர்கை மற்றும் முருகனை வழிபாடு செய்தால் ஏற்றம் பெறுவீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்