சிம்மம் - வேலையில் டென்ஷன்

Update: 2024-03-11 18:30 GMT

2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்படுவது நல்லது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் சுமாராக உள்ளது. யார் மீதாவது காதல் இருந்தால் அந்த காதல் வெற்றியடையும். பொருளாதாரமும் சுமாராக இருப்பதால் தேவை இருந்தால் கடன் வாங்குங்கள். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்த வாரத்திலேயே செய்வது நல்லது. உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களது பணம், பொருள் முடங்க வாய்ப்பு உள்ளது. வேலையில் டென்ஷன் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். எல்லா விஷயங்களிலும் அடக்கி வாசிப்பது நல்லது. உற்பத்தி, சிவில், மெக்கானிக்கல், கட்டுமானம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. சிவன் மற்றும் துர்க்கையை வழிபடுவது சிறந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்