மக்களை நீருக்குள் மூழ்கடித்து கொல்லும் அலேயா விளக்குகள்! ஆவிகளின் வேலை என நம்பும் உள்ளூர்வாசிகள்!

ஒரு அமானுஷ்ய நிகழ்வை பற்றின செய்தி நம்மை எப்பொழுதும் கவர்ந்திழுக்கும். நீங்கள் அத்தகையவர்களில் ஒருவராக இருந்தால், மேற்கு வங்காளத்தில் உள்ள அலேயா பேய் விளக்குகளின் கதையை நீங்கள் கண்டிப்பாக விரும்புவீர்கள். மேற்கு வங்கத்தில் இருக்கும் சதுப்பு நில காடுகளில் அத்தகைய விநோதத்தை காணலாம். இந்த ஒளிரும் வண்ணமயமான விளக்குகளை நீங்கள் அணுகினால், அவை உங்களை சதுப்பு நிலங்களின் ஆழத்திற்கு மூழ்கடிக்கும் என்று நம்பப்படுகிறது. மக்கள் இந்த விளக்குகளைப் பின்பற்றும்போது, n அவர்கள் இறந்துவிடுவார்கள் அல்லது மர்மமான முறையில் மூழ்கிவிடுவார்கள் உள்ளூர் வாசிகளால் நம்பப்படுகிறது. இது மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவிலேயே மிகவும் அமானுஷ்யம் நிறைந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் இருக்கும் அலேயா பேய் விளக்குகள் பற்றி விரிவாக இத்தொகுப்பில் காணலாம்.

Update:2024-08-20 00:00 IST
Click the Play button to listen to article

ஒரு அமானுஷ்ய நிகழ்வை பற்றின செய்தி நம்மை எப்பொழுதும் கவர்ந்திழுக்கும். அத்தகையவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், மேற்குவங்கத்தில் உள்ள அலேயா பேய் விளக்குகளை கண்டிப்பாக விரும்புவீர்கள். மேற்குவங்கத்தில் இருக்கும் சதுப்பு நில காடுகளில் அத்தகைய விநோதத்தை காணலாம். இந்த ஒளிரும் வண்ணமயமான விளக்குகளை நீங்கள் அணுகினால், அவை உங்களை சதுப்பு நிலங்களின் ஆழத்திற்குள் மூழ்கடிக்கும் என்று நம்பப்படுகிறது. மக்கள் இந்த விளக்குகளைப் பின்பற்றி செல்லும்போது இறந்துவிடுவார்கள் அல்லது மர்மமான முறையில் மூழ்கிவிடுவார்கள் என உள்ளூர் வாசிகள் நம்புகின்றனர். இந்தியாவிலேயே மிகவும் அமானுஷ்யம் நிறைந்த இடங்களில் ஒன்றாக மேற்குவங்கத்தின் சதுப்பு நிலங்களில் காணப்படும் அலேயா விளக்குகள் உள்ளன. இதுபற்றி விரிவாக இத்தொகுப்பில் காணலாம்.


சதுப்புநில காடுகளில் தோன்றும் அலேயா விளக்குகள் 

மக்களை மூழ்கடிக்கும் பேய் விளக்குகள்!

மேற்குவங்கத்தில் சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனத்திற்கு மத்தியில் குளிர்ச்சியான ரகசியம் மறைந்துள்ளது. கோஸ்ட் லைட்ஸ் என்று அழைக்கப்படும் அலேயா பேய் விளக்குகள்தான் அவை. அடர்ந்த காடுகளை இருள் சூழ்ந்த பிறகு இந்த விசித்திரமான விளக்குகள் சதுப்பு நிலங்கள் முழுவதும் ஒளிருகின்றன. இந்த விளக்குகள் சதுப்பு நிலங்களில் வாழும் ஆவிகள் என நம்பப்படுகின்றன. இந்த ஆவிகள், தண்ணீரில் மூழ்கி இறந்த மீனவர்களின் ஆன்மாக்கள் என்று கூறப்படுகிறது. சதுப்பு நிலங்களுக்கு நடுவே தண்ணீருக்கு மேலே காணப்படும் இந்த ஒளி விளக்கை பின்தொடர்ந்து செல்பவர்கள் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொல்லப்படுகின்றனராம். இவை வில்-ஓ-தி-விஸ்ப், ஜாக்-ஓ-லாந்தர் போன்ற வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன. மேற்குவங்கம் மட்டுமன்றி, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் கூட இவை காணப்படுகின்றன. பேய் விளக்குகள் குறித்த செய்தி தற்போது பரவலாக பேசப்படுவதால், இந்த பகுதி சமீபத்திய ஆண்டுகளில் சுற்றுலா இடமாக மாறியுள்ளது. 


ஆற்றில் குழப்பத்தை ஏற்படுத்தும் அலேயா விளக்குகள் 

ஏன் என முழுமையான விளக்கம் இல்லை! 

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த நிகழ்வு ஒரு வகை பிளாங்க்டன்களால் ஏற்படுவதாகவும், மீத்தேன் அயனியாக்கத்தால் ஏற்படுவதாகவும், இயற்கையான மின் நிகழ்வுகளால் ஏற்படுவதாகவும் பல்வேறு கோட்பாடுகளை விளக்குகின்றனர். ஆனால் அந்த கோட்பாடுகள், அலேயா விளக்குகள் ஏன் ஒரே வழியில் நகர்கின்றன மற்றும் வட்டமிடுகின்றன என்பதை விளக்கவில்லை.

ஆனால் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் இந்த விளக்குகள் பற்றி வேறுவிதமாகக் கூறுகின்றன. இந்த பகுதிகளில் புதையல் இருப்பதாகவும், அவற்றை ஆவிகள் காவல் காப்பதாகவும், அவைதான் விளக்குகள் போல் ஒளிர்வதாகவும் தெரிவிக்கின்றன. 


தீர்க்க முடியாத மர்மாக இருக்கும் அலேயா விளக்குகள் 

தீர்க்க முடியாத மர்மம்

அலேயா விளக்குகள் குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அவை மர்மத்தை முழுமையாக விளக்காமல் சில ரகசியங்களுடனேயே உள்ளன. எனவே இதனை பேய் என்றே மக்கள் நம்புகின்றனர். அதேநேரம் இந்த நிகழ்வு இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. அமெரிக்கா, லாட்வியா, ஆஸ்திரேலியா, பின்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள நீர்நிலைகளில் காணாமல் போனோர் மற்றும் இறந்தவர்களின் வழக்குகள் இதுபோன்ற அலேயா விளக்குகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்