போக்குவரத்தில் எச்சரிக்கை

Update:2025-04-15 00:00 IST

2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. வேலையில் இருக்கக்கூடிய பிரச்சினைகள், தடைகள் நீங்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நல்ல பெண் வேலையாட்கள் அமைவார்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். கடன் வாங்கி இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்பு, சந்தர்ப்ப, சூழ்நிலைகள் உருவாகும். தொழில் சுமார். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. தொழில் நடந்தாலே போதும் என்ற நிலை இருப்பதால் முதலீடு எதுவும் வேண்டாம். மணவாழ்க்கையுமே திருப்தியற்ற நிலையில்தான் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள். போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் எச்சரிக்கையாக செல்லுங்கள். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்