நினைத்தது நடக்கும்
2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நினைத்த காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருப்பார்கள். இடம், வீடு, ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. வழக்குகளில் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள், எதிரிகளை வெற்றி கொள்வதற்கான காலகட்டங்கள் அத்தனையும் உண்டு. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு பரவாயில்லை. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் நல்லது நடக்கும். உங்கள் வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு, அரியர்ஸ், போனஸ், இன்சென்டிவ் ஆகியவை வராமல் இருந்தால் அவை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்பாவுடைய அன்பு ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். முருகனை பிரதானமாக தரிசனம் செய்யுங்கள்.