குழப்பங்கள் வேண்டாம்
2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக இருக்கிறது. வேலையில் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம், மாற்றங்கள் அனைத்தும் உண்டு. வேலையின் காரணமாக பயணம், அந்த பயணத்தால் நன்மை கண்டிப்பாக இருக்கிறது. உங்கள் முயற்சிகள் அத்தனையும் வெற்றி பெறும். எதிர்பார்த்த, எதிர்பார்க்காத செய்திகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக வரும். பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. கடன் கேட்டிருந்தால் அதில் இருந்த தடைகள் நீங்கி கடன் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி இருந்தால் வெற்றி பெறுவீர்கள். தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம். நினைப்பது அனைத்தும் நடக்கும். சிறு தொழில், சுயதொழில் பிசினஸ் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. எந்த தொழில் செய்தாலும் லாபத்தை கொடுக்கும். அதனால் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். உயர் கல்வி தொடர நினைப்பவர்கள் தொடருங்கள். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கும் கருடாழ்வாரை தரிசனம் செய்யுங்கள். சிவன் கோயிலில் இருக்கும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.