எதிரிகளை ஜெயிப்பீர்கள்
2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருந்தால் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உங்கள் எதிரிகள் அனைவரையும் ஜெயிப்பீர்கள். நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ் ஆகியவற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர உங்கள் வேலையில் என்னவெல்லாம் எதிர்பார்த்து காத்து இருக்கிறீர்களோ அது அத்தனையும் நடக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவு மகசூல், லாபம், வருமானம் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் தகராறு தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. இளைய சகோதர - சகோதரிகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.