வேலையில் கவனம்
2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலை, வருமானம் இருக்கிறது. ஆனால், பெரிய முன்னேற்றம் இல்லை. பொருளாதாரத்தை பொறுத்தவரை கையில், பணம் தனம், பொருள் இருக்கிறது. கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். புதிய முயற்சிகள் எடுத்தால் வெற்றிபெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். தொழில் தகராறு; தொழில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை உண்டு. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டு விட்டு நடக்கும். மணவாழ்க்கையில் கணவன் - மனைவி இருவரும் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். தேவையற்ற பேச்சுகளை குறையுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மகசூல், லாபம், வருமானம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவன் கோயிலில் இருக்கும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.