எதிர்பாராத பயணம்
2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எவ்வளவு சம்பாதித்தாலும் நீங்கள் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற விரயம், நஷ்டம், வைத்தியச் செலவுகள் ஏற்படும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் எதிர்பார்த்த அத்தனையும் நடக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் போன்ற அனைத்து மானிட்டரி பெனிஃபிட்ஸ் கிடைக்கும். சில விஷயங்களை ஆறப் போடுங்கள்; சில விஷயங்களில் துணிந்து முடிவு எடுங்கள். நல்ல வேலையாட்கள் குறிப்பாக பெண் வேலையாட்கள் அமைவார்கள். இரண்டு இடங்களில் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இரண்டாவது திருமணத்திற்கும் வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு கூடும். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.