செலவுகள் அதிகமாக இருக்கும்

Update:2025-02-04 00:00 IST

2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை பிரமாதமாக உள்ளது. உங்கள் வேலையில், பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ் இப்படி என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ அது எல்லாம் கிடைக்கும். வேலையில் இடமாற்றம், பணி மாற்றம் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் உண்டு. வருமானங்கள் இருக்கும் அதே அளவுக்கு இரண்டு மடங்கு செலவுகளும் இருக்கிறது. உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உதவி செய்வார்கள். புதிய நட்பு உருவாகும். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை ஏற்படும். விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். வீடு, இடம், ஊர் மாற நினைத்தவர்களுக்கு மாற்றங்கள் உண்டு. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு சுமாராக இருக்கிறது. கடன் குறையும். தொழில் நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமான் வழிபாடு மற்றும் பூவராகப் பெருமாளை தரிசனம் செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்