திகிலை கிளப்பும் பொம்மை தீவு! அந்தரத்தில் தொங்கும் "பேய் பொம்மைகள்"?
யாருமே இல்லாத ஒரு தீவில் 1500க்கும் அதிகமான பொம்மைகள் இருக்கிறது என்றால் எளிதில் நம்ப முடியாது. ஆனால் அப்படியான ஒரு இடம் இன்றும் இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு பொம்மையும் திகிலை கிளப்பும் வகையில் உள்ளது. அது பற்றிதான் விரிவாக காணப்போகிறோம். இந்த இடம் பொம்மைகளால் சூழப்பட்டு அமானுஷ்யம் நிறைந்ததாக காணப்பட, இந்த தீவில் ஒரு காலத்தில் தனிமையாக வாழ்ந்த, தீவின் முன்னாள் உரிமையாளரான டான் ஜூலியன் சந்தனா பரேராவுக்கும் பெரும் பங்குண்டு.
யாருமே இல்லாத ஒரு தீவில் 1500க்கும் அதிகமான பொம்மைகள் இருக்கிறது என்றால் எளிதில் நம்ப முடியாது. ஆனால் அப்படியான ஒரு இடம் இன்றும் இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு பொம்மையும் திகிலை கிளப்பும் வகையில் உள்ளது. அது பற்றிதான் விரிவாக காணப்போகிறோம். இந்த இடம் பொம்மைகளால் சூழப்பட்டு அமானுஷ்யம் நிறைந்ததாக காணப்பட, இந்த தீவில் ஒரு காலத்தில் தனிமையாக வாழ்ந்த, தீவின் முன்னாள் உரிமையாளரான டான் ஜூலியன் சந்தனா பரேராவுக்கும் பெரும் பங்குண்டு. அமெரிக்காவின் மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள இந்த பகுதி, முன்னர் மிதக்கும் தோட்டம் என அழைக்கப்பட்டது. சுற்றிலும் ஏரி தண்ணீர் சூழ்ந்த இப்பகுதியிருந்து மறுகரைக்குச் செல்ல ஏரி தண்ணீரிலேயே சுமார் 1.30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இந்த இடத்தில்தான் ஒரு சிறிய நகரம் உள்ளது. இன்று உலகத்தில் மிகப் பயங்கரமான இடங்களில் இதுவும் ஒன்று. இந்த மிதக்கும் தோட்டம் எப்படி பொம்மை தீவாக மாறியது? என்பதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.. வாருங்கள்...
மரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் பொம்மைகள்
பொம்மை தீவின் வரலாறு
20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த தீவை சொந்தமாக்கினார் டான் ஜூலியன் சந்தனா பரேரா, பிறகு இந்த தீவில் தனிமையாக இருந்த பரேரா பொம்மைகளை சேகரித்து சிறிய தீவில் தொங்கவிடத் தொடங்கினார். 1943ஆம் ஆண்டில் மெக்ஸிகன் இயக்குநரான எமிலியோ ஃபெர்னாண்டஸ் மரியா கேண்டலேரியா இந்த இடத்தை இருப்பிடமாக வைத்து திரைப்படம் எடுத்தபொழுது இந்த தீவு மக்களிடையே பிரபலமடைந்தது. 2001ஆம் ஆண்டு பரேராவின் மரணத்திற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் இந்த தீவை சுற்றுலாத் தலமாக மாற்றி பொதுமக்களுக்காக திறந்தனர். இந்த தீவில் நூற்றுக்கணக்கான பொம்மைகளைத் தவிர, மைதானத்தில் மூன்று குடிசைகள் மற்றும் முந்தைய உரிமையாளரைப் பற்றிய உள்ளூர் செய்தித்தாள்களின் கட்டுரைகளைக் கொண்ட ஒரு சிறிய அருங்காட்சியகம் உள்ளது. பரேரா தூங்கிய அறை, முதலில் பரேரா சேகரித்த பொம்மைகள், அவருக்குப் பிடித்தமான அகுஸ்டினா பொம்மை உள்ளிட்டவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டிராஜினெராஸ் என்று குறிப்பிடப்படும் கோண்டோலா போன்ற படகுகள் மூலம் பொம்மைகளின் தீவை பொதுமக்கள் அணுக முடியும். பெரும்பாலான படகோட்டிகள் மக்களை தீவிற்கு அழைத்து செல்ல தயாராக உள்ளனர். ஆனால் மூடநம்பிக்கை காரணமாக மறுப்பவர்களும் உள்ளனர்.
டான் ஜூலியானால் கட்டப்பட்ட பொம்மை
பொம்மை தீவின் புராண கதை
19ம் நூற்றாண்டில், இந்த தீவிலிருந்து சுமார் 1.30 மணி நேரப் படகு பயணத்திற்குப் பிறகு ஒரு சிறிய கிராமம் இருந்துள்ளது. அப்பொழுது அந்த கிராமத்தில் 3 சிறுமிகள் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்பொழுது அந்த கிரமத்திற்குப் பக்கத்திலிருந்த பெரிய ஏரியில் தாமரை மற்றும் மல்லிப்பூ மலர்வது வழக்கம். அந்த சிறுமிகள் விளையாட்டு ஆர்வத்தில் அந்த ஏரியின் பக்கம் சென்று விளையாடினர். அப்பொழுது அந்த சிறுமிகளில் ஒரு சிறுமிக்கு, ஏரிக்குள் இருந்த அல்லிப்பூவை பறிக்க வேண்டும் என ஆசை வந்தது. அதனால் அந்த சிறுமி ஆபத்தை அறியாமல் தண்ணீருக்குள் இறங்கிவிட்டார். அந்த சிறுமிக்கு ஒரு பழக்கம் இருந்தது. எப்பொழுதும் ஒரு பொம்மையுடனேயேதான் இருப்பார். அந்த பொம்மையை தன்னுடைய உடன் பிறப்பு போலவே பார்த்துக் கொள்ளவார். இப்படியாக அந்த சிறுமி ஏரிக்குள் இறங்கும்போது அந்த பொம்மையுடனேயே இருந்துள்ளார். அந்த சிறுமிக்கு நீச்சல் தெரியாததால் நீருக்குள் முழ்கியுள்ளார். இதைப் பார்த்த மற்ற இரண்டு சிறுமிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து, அவர்களின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளனர்.
1500 பொம்மைகள் தொங்கவிடப்பட்டுள்ள பொம்மை தீவு
டான் ஜூலியன் வருகை
நீரில் முழ்கிய சிறுமியின் உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடியும் நீருக்குள் சென்ற சிறுமியின் உடல் கிடைக்கவேயில்லை. அப்பொழுது ஏரியில் நீரோட்டம் இருந்ததால் சிறுமி நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன்பிறகுதான் 20ம் நூற்றாண்டின் மத்தியில் அப்பகுதிக்கு டான் ஜூலியன் சென்றுள்ளார். அவர் அந்த கிராமத்திலிருந்த ஒரு சிறிய படகு மூலம் அந்த ஏரியை அடைந்திருக்கிறார். அப்பொழுது கிராமத்திலிருந்து சில மைல் தூரத்தில் அழகான தீவு ஒன்று இருந்துள்ளது. அந்த தீவைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக படகை அந்த இடத்தை நோக்கிச் செலுத்தி அந்த தீவில் இறங்கினார்.
பல வருடங்கள் தீவில் தங்கியிருந்த டான் ஜூலியன்
தீவில் கேட்கும் மர்ம குரல்
தீவில் அவர் இறங்கிய சில நிமிடங்களில் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த தீவிலிருந்து ஒரு குரல் அவருக்குக் கேட்டுள்ளது. அந்த குரல் அவரிடம் "என்னை ஏன் நீங்கள் காப்பாற்றவில்லை அப்பா" எனக் கேட்டுள்ளது. அதைக் கேட்டதும் அவருக்கு அதிர்ச்சியாகிவிட்டது தீவில் யாராவது இருக்கிறார்களா என சுற்றி சுற்றி பார்த்துள்ளார். தீவில் அவரை தவிர வேறு யாரும் இல்லை. ஆனால் அந்த தீவில் ஒரே ஒரு பொம்மை மட்டும் கிடந்தது. அந்த பொம்மையை அவர் கையில் எடுத்து அது எப்படி இங்கே வந்தது எனப் பார்த்தபோது அவருக்கு மீண்டும் அந்த குரல் கேட்டுள்ளது. அந்த குரல் இந்த முறை அவரிடம் "என்னை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் அப்பா" எனக் கூறியுள்ளது. இதை கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்து அந்த பொம்மையுடனேயே தன் படகில் ஏறி மீண்டும், படகை எடுத்து வந்த கிராமத்திற்கே சென்றுள்ளார். அந்த கிராமத்திற்கு சென்ற அவர் அங்குள்ள மக்களிடம் தனக்கு நடந்ததை சொல்லி அந்த பொம்மையை காட்டியுள்ளார். அப்போது அந்த கிராமத்தில் இருந்த முதியவர் ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில், சிறுமி ஒருத்தி அந்த ஏரியில் பொம்மையுடன் முழ்கி இறந்துவிட்டதாகவும், அந்த சிறுமியின் உடல் கூட கிடைக்கவில்லை எனவும், அந்த சிறுமி கையில் இதே போலதான் ஒரு பொம்மையை வைத்திருந்ததாகவும் கூறினார்.
பொம்மைகளுடன் வாழ்ந்த டான் ஜூலியன்
தனிமையாக இருந்த டான் ஜூலியன்
இதை கேட்டதும் அவருக்கு அந்த தீவில் கேட்ட குரல் மனதிற்கு வந்தது. ஏரியில் விழுந்து இறந்த சிறுமிதான் இன்னும் அந்த தீவில் ஆவியாக சுற்றுவதாக அவர் கருதினார். பின்னர் தன் வீட்டிற்கு அந்த பொம்மையுடனேயே சென்றார். அங்கு அவர் தனிமையிலேயே இருக்க விரும்பினார். தன் மனைவி மற்றும் குழந்தைகள் என யாரிடமும் பேசாமல் இருந்தார். அந்த தீவில் அந்த குரல் அப்பா என அழைத்தது அவருக்கு மனதிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தான் அந்த குழந்தையின் முந்தைய ஜென்ம அப்பாவாக இருக்கலாமோ என்று எண்ண துவங்கினார் டான் ஜூலியன். மறுநாள்முதல் அவரால் தன் வீட்டில் இருக்க முடியவில்லை. அந்த தீவிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என அவருக்கு தோன்றிக்கொண்டே இருந்துள்ளது. உடனடியாக அவர் எதையும் யோசிக்காமல் தன் மனைவி மற்றும் குழந்தைகளை தனியாக தவிக்க விட்டுவிட்டு, தான் கொண்டு வந்த பொம்மையை எடுத்துக்கொண்டு அந்த தீவிற்கு சென்றார். அந்த தீவிலேயே தங்கி விடலாம் என முடிவும் செய்துவிட்டார். தனக்கு வெளி உலகம் வேண்டாம், தானும், அந்த பொம்மையும் மட்டுமே போதும் என்றும் முடிவு செய்துவிட்டார்.
சுற்றுலாத்தலமாக மாறிய பொம்மை தீவு
அந்தரத்தில் தொங்கும் 1500 பொம்மைகள்
1900ஆம் ஆண்டு இந்த தீவை பற்றி கேள்விப்பட்டு ஒரு புகைப்பட கலைஞர் வந்தார். சுமார் 1.30 மணி நேரம் பயணம் செய்து அந்த தீவை அவர் சென்றடைந்தார். அவர் பார்த்த காட்சி அவரை அச்சமூட்டியது. தீவு முழுவதும் திகிலான பொம்மைகள் மரத்தில் கட்டப்பட்டு இருந்தன. கிட்டத்தட்ட 1500க்கும் அதிகமான பொம்மைகள் இருந்துள்ளன. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து அதனை புகைப்படம் எடுத்து வெளி உலகிற்கு காட்டினார். அந்த காலத்தில் அனைத்து ஊடகங்களிலும் அந்த செய்தி வைரலாக பரவியது.