சென்னை PHAROS ஹோட்டலில் நடந்த பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் செரிமனி!

கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்காக சுமார் 50 கிலோ அளவிலான உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகள் மதுக்கலவையில் மிக்ஸ் செய்யப்பட்டன. இந்த கலவையை கொண்டு 70 முதல் 80 கிலோ வரையிலான கேக் தயாரிக்கப்படவுள்ளது.

Update: 2024-11-25 18:30 GMT
Click the Play button to listen to article

டிசம்பர் மாத இறுதியில்தான் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் என்றாலும், டிசம்பர் தொடக்கத்திலேயே அதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்தவ மக்கள் செய்ய தொடங்கிவிடுவார்கள். ஏசு கிறிஸ்துவின் வருகையை குறிக்கும் வகையில் வீட்டு வாசலில் நட்சத்திரங்களைத் தொங்கவிடுவது, அவரது பிறப்பைச் சித்தரிக்கும் வகையில் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து குடில்கள் அமைப்பது, கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பாடுவது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிவது, கேக் தயாரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள். அதிலும் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியை நவம்பர் மாத பாதியிலேயே தொடங்கிவிடுவார்கள். கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு என்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படும். அந்த வகையில் சென்னையின் பிரம்மாண்ட ஸ்டார் ஹோட்டலான "PHAROS"-ல் நடைபெற்ற பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழாவை இந்த பதிவில் பார்ப்போம்.


கேக் மிக்ஸிங் விழாவுக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த பொருட்கள்

"கேக் மிக்ஸிங் செரிமனி"

கிறிஸ்துமஸ் "கேக் மிக்ஸிங் செரிமனி" என்ற பெயரில் நடக்கும் இந்த விழா, 17-ம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தில் தொடங்கி, பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவியது. விக்டோரியா ராணி காலத்தில் அமெரிக்காவுக்கும் பரவிய இந்த கேக் தயாரிப்பு விழா, தற்போது ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழாவை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடி வருகின்றன. 

ஹோட்டல் "PHAROS"

அந்தவகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபரோஸ் நட்சத்திர ஓட்டலில், பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா பிரம்மாண்டமாக நடந்தது. ஃபரோஸ் நட்சத்திர ஹோட்டல் சென்னை நகரின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. தூதரகங்கள், பொட்டிக்குகள் மற்றும் பல முக்கிய இடங்கள் இந்த ஹோட்டலை சுற்றி அமைந்துள்ளதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்னையில் தங்குவதற்கு ஏற்ற இடமாக இது விளங்குகிறது. குறிப்பாக அமெரிக்கா, இலங்கை, பெல்ஜியம், சிங்கப்பூர், செஷெல்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு குடிவரவு அலுவலகம், அமெரிக்க பயோமெட்ரிக் மையம், பிரிட்டிஷ் துணை உயர் ஸ்தானிகராலயம், யுஏஇ சான்றளிப்பு மையம் மற்றும் VFS குளோபல் போன்ற பிற ஆவண மையங்களும் ஃபரோஸ் நட்சத்திர ஹோட்டலை சுற்றியே அமைந்துள்ளன. 


ஃபரோஸ் ஹோட்டலின் நீச்சல் குளம்

ஃபரோஸ் ஹோட்டலில் எக்ஸிகியூட்டிவ் அறை, டீலக்ஸ் அறை, நிர்வாக தொகுப்பு, டீலக்ஸ் சூட் என வசதிக்கு ஏற்ப தங்கும் அறைகள் உள்ளன. ஹோட்டலில் பிரபலமான உணவகங்களான 24 மணி நேர காபி ஷாப், விவாஹா போஜனம் உணவகம், க்குஹே போன்ற பேஸ்ட்ரி ஷாப், அலெக்ஸாண்ட்ரியா டேவர்ன் என்ற உலகளாவிய உணவுகளை வழங்கும் ஆடம்பரமான பார், ஹார்ட் ராக் கஃபே போன்றவை உள்ளன. நீச்சல் குளம், ஸ்பா, உடற்பயிற்சி மையம். வசதியான நவீன வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை ஹோட்டலின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. மேலும், ஃபரோஸ் ஹோட்டலில் வழங்கப்படும் விருந்தோம்பல், பல்வேறு நாட்டினரையும் கவர்ந்துள்ளதால், சென்னை வந்தால் இங்குதான் தங்க வேண்டும் என்று நினைக்கும் வழக்கமான வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்காகவே குளோபல் குசின் எனப்படும் உலகளாவிய உணவுகள் ஃபரோஸ் ஹோட்டலில் வழங்கப்படுகின்றன. அத்துடன் வாடிக்கையாளர்களின் கருத்திற்கு ஏற்ப ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை இங்கு மெனு அயிட்டங்கள் மாற்றப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பு.


ஃபரோஸ் ஹோட்டலில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக சமைக்கப்படும் உலகளாவிய உணவுகள்

"PHAROS"ல் நடந்த கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா

பல்வேறு சிறப்புகளை கொண்ட ஃபரோஸ் ஹோட்டலில் நடைபெற்ற கேக் மிக்ஸிங் செரிமனியில், அந்த ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்களே சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். ஹோட்டல் வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அனைவருக்கும் ஏப்ரனும், கைகளுக்கு கிளவுசும் வழங்கப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற  விழாவில், கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்காக சுமார் 45 கிலோ அளவிலான உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகள் மதுக்கலவையில் மிக்ஸ் செய்யப்பட்டன. மேலும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஸ்பெஷல் உணவுகள் பரிமாறப்பட்டன.


ஃபரோஸ் ஹோட்டலில் நடைபெற்ற பிரம்மாண்ட கேக் மிக்ஸிங் விழா

இந்த விழா குறித்து பேசிய தலைமை செஃப் தினகர், கடந்த ஆண்டு ஊறவைக்கப்பட்ட உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகள், ஏற்கனவே கையிருப்பில் 5 கிலோ இருப்பதாகவும், அவற்றைக்கொண்டு, வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து கேக் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது ஊறவைக்கப்பட்டுள்ள உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகளைக் கொண்டு, டிசம்பர் 15-ம் தேதி முதல் கேக்குகள் தயாரித்து வழங்கப்படும் என்று கூறினார். மேலும் மொத்தமாக இந்த கலவையை கொண்டு 70 முதல் 80 கிலோ வரையிலான கேக் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்