வசூல் வேட்டையை தொடங்கியது 'லியோ'!

ஒட்டு மொத்த திரையுலகமுமே எதிர்பார்த்து காத்திருந்த லோக்கேஷ் மற்றும் விஜயின் கூட்டணியில் திரையில் வெற்றி நடை போடும் லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது மக்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

Update:2023-10-23 11:16 IST

ஒட்டுமொத்த திரையுலகமுமே எதிர்பார்த்து காத்திருந்த லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் திரையில் வெற்றி நடை போடும் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது மக்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவந்த படம் தான் ‘லியோ’. நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ‘லியோ’ விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு திரைப்படமாகும். இந்நிலையில் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தை திரையில் முதல் நாளே காண வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள், திரைபிரபலங்கள் என அனைவரும் ஒன்று திரண்டு கூட்டம் கூட்டமாக திரைப்படம் வெளியான முதல் நாளே திரையரங்கை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இவ்வாறு கூடிய கூட்டமானது படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே படத்தின் வசூலானது உச்சத்தை எட்டியுள்ளது.


லியோவின் வசூல் விவரம்:

முதல் நாளின் படி, உலக அளவில் ‘லியோ’ திரைப்படத்தின் வசூல் விவரம் 140 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் ரூபாய் 74 கோடியும், குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 30 கோடி வசூலித்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் ரூபாய் 14 கோடியும், கேரளாவில் ரூ 11 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 15 கோடி ரூபாயும், இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் ரூ.66 கோடி வரையில் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே வசூலாகி இருப்பது தெரியவந்துள்ளது.

சாதனைகளை முறியடித்த லியோ:

2023 ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ‘ஜெய்லர்’ படத்தின் முதல் நாள் வசூல் செய்திருந்த சாதனையையும், அதனைத் தொடர்ந்து அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் என இவை இரண்டு முன்னணி திரைப்படங்கள் செய்த வசூல் ரீதியான சாதனையையும் முறியடித்து முந்தி இருக்கிறது விஜயின் ‘லியோ’ திரைப்படம்.

Tags:    

மேலும் செய்திகள்