இலக்கியம் வகுத்த நடிகை!
நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று பானுமதியை அறிஞர் அண்ணா பாராட்டினார்.
(20.01.1974 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
“நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று பானுமதியை அறிஞர் அண்ணா பாராட்டினார். அதே போல, நடிப்புக்கு இலக்கியம் வகுத்த நடிகை ஜெயலலிதா!'' என்று, முதலமைச்சர் கருணாநிதி பாராட்டினார்.
100 படங்களில் நடித்து முடித்த ஜெயலலிதாவுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடந்தது. அப்பொழுது, "நடிப்புக்கு இலக்கியம் வகுத்த நடிகை” என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு கருணாநிதி வழங்கினார்.
தங்கச் சிலை
இருவேறு தோற்றங்களில் அழகாக காட்சியளிக்கும் நடிகை ஜெயலலிதா
“தங்கச் சிலை”, “நாட்டியக் கலையரசி”, “நாட்டிய கலைமாமணி”, “திரை நிலவு", "கலைத்திலகம்", "நவரசத் தாரகை", "கலைச் செல்வி", "கவர்ச்சிக் கன்னி" ஆகிய பட்டங்கள் ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு இருக்கின்றன. "கலைமாமணி" என்ற பட்டத்தை தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் வழங்கியது.
டெல்லி சர்க்கார், தமிழ்நாடு அரசு, ஆந்திரா அரசு, சினிமா ரசிகர் சங்கம் உள்ளிட்டவை வழங்கிய பரிசுகளை ஜெயலலிதா பெற்று இருக்கிறார்.
100வது படம்
இப்பொழுது வெளிவந்திருக்கும் "திருமாங்கல்யம்” ஜெயலலிதாவின் 100-வது படம். நூறு படத்திலும் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அவற்றில் ஒன்று ஆங்கிலப் படம்! தமிழ் 70, தெலுங்கு 23, கன்னடம் 5, இந்தி 1. இவை தவிர, "ஸ்ரீசைவ மகாத்மியம்" என்ற கன்னடப் படத்தில் சிறுமியாக நடித்து இருக்கிறார். "நவராத்திரி” தெலுங்குப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். 2 தமிழ்ப் படம், ஒரு தெலுங்குப் படம், ஒரு கன்னடப் படம், ஒரு மலையாளப் படம், ஓர் இந்திப் படம் ஆகியவற்றில் நடனம் மட்டும் ஆடியிருக்கிறார்.
முதல் படம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் திரைப்பட காட்சி ஒன்றில் செல்வி ஜெயலலிதா
10 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட உலகில் ஜெயலலிதா புகுந்தார். 1964-ல் "சின்னத கொம்பே" என்ற கன்னடப் படத்தில் நடித்தார். முதலில் நடித்த தமிழ்ப் படம் "வெண்ணிற ஆடை”. “மனுசுலு மமதாலு" என்ற தெலுங்குப் படத்தின் வாயிலாக தெலுங்குத் திரை உலகில் புகுந்தார்.
ஜெயலலிதா நடித்த 100 படங்களின் விவரம் வருமாறு:-
1. சின்னத கொம்பே (கன்னடம்), 2. மனே அலியா (கன்னடம்), 3. வெண்ணிற ஆடை 4. நன்னா கர்தவ்யா (கன்னடம்), 5. ஆயிரத்தில் ஒருவன், 6. நீ, 7. மனுசுலு மமதாலு (தெலுங்கு), 8. கன்னித்தாய், 9. மாவன மகளு (கன்னடம்), 10. மோட்டார் சுந்தரம் பிள்ளை, 11. முகராசி, 12. யார் நீ, 13. குமரிப் பெண், 14. பதுகுவதாரி (கன்னடம்), 15. சந்திரோதயம், 16. கூடாச்சாரி (தெலுங்கு), 17. எபிசில் (ஆங்கிலம்), 18. தனிப்பிறவி, 19. ஆமே எவரு (தெலுங்கு), 20. மேஜர் சந்திரகாந்த், 21. கவுரி கல்யாணம், 22. ஆஸ்தி பருலு (தெலுங்கு), 23. மணிமகுடம், 24. தாய்க்குத் தலைமகன், 25. கோபாலுடு பூபாலுடு (தெலுங்கு), 26. கந்தன் கருணை, 27. மகராசி, 28. அரசன் கட்டளை, 29. மாடிவீட்டு மாப்பிள்ளை, 30. ராஜா வீட்டு பிள்ளை, 31. காவல்காரன், 32. நான், 33. சிக்கடு தொரகடு, 34. சுகதுக்காலு (தெலுங்கு), 35. ரகசிய போலீஸ், 36. அன்று கண்ட முகம், 37. நிலவு தோபிடி(தெலுங்கு), 38. பிரமசாரி (தெலுங்கு), 39. தேர் திருவிழா, 40. குடியிருந்த கோயில்.
'ஆதிபராசக்தி' திரைப்படத்தில் முருகனாக வரும் ஸ்ரீதேவியுடன் மற்றும் பேட்டி ஒன்றுக்கு அலங்காரம் செய்தபோது
41. டிக்கா சங்கரய்யா (தெலுங்கு), 42. கலாட்டா கல்யாணம், 43. பணக்கார பிள்ளை, 44. கண்ணன் என் காதலன், 45. மூன்றெழுத்து, 46. பொம்மலாட்டம், 47. புதிய பூமி, 48. காதல் வாகனம், 49. முத்துசிப்பி, 50. ஒளி விளக்கு, 51. எங்க ஊர் ராஜா, 52. காதல் வாகனம், 53. பாக்டேட் கஜதொங்கா (தெலுங்கு), 54. ஸ்ரீ ராம கதா, 55. அதிர்ஷ்ட வந்தலு (தெலுங்கு), 56. குருதக்ஷிணை, 57. கதாநாயகுடு (தெலுங்கு), 58. காந்திகோட்டா ரகசியம் (தெலுங்கு), 59. அடிமைப் பெண், 60. அனாதை ஆனந்தன், 61.குருதட்சணை, 62. கதலடு வதலடு (தெலுங்கு), 63. மகன், 64. நம் நாடு, 65. எங்க மாமா, 66. மாட்டுக்கார வேலன், 67. அலிபாபா 40 தொங்கலு (தெலுங்கு), 68. அண்ணன், 69. தேடி வந்த மாப்பிள்ளை, 70. என் அண்ணன், 71. எங்கள் தங்கம், 72. எங்கிருந்தோ வந்தாள், 73. பாதுகாப்பு, 74. ஸ்ரீ கிருஷ்ண விஜயம் (தெலுங்கு), 75. குமரி கோட்டம், 76. சுமதி என் சுந்தரி, 77. சவாலே சமாளி, 78. தங்கக் கோபுரம், 79. அன்னை வேளாங்கண்ணி, 80. ஆதிபராசக்தி, 81. நீரும் நெருப்பும், 82. ஒரு தாய் மக்கள், 83. ஸ்ரீ சத்தியா (தெலுங்கு), 84. பார்யா பிட்டலு, 85. ராஜா, 86. திக்குத் தெரியாத காட்டில், 87. ராமன் தேடிய சீதை, 88. பட்டிக்காடா பட்டணமா, 89. தர்மம் எங்கே, 90. அன்னமிட்ட கை, 91. சத்தி லீலை, 92. நீதி, 93. கங்கா கவுரி, 94. வந்தாளே மகராசி, 95. தேவுடு சேசின மனசுலு (தெலுங்கு), 96. பட்டிக்காட்டு பொன்னையா, 97. சூரியகாந்தி, 98. பாக்தாத் திருடன், 99. டாக்டர் பாபு (தெலுங்கு), 100. திருமாங்கல்யம்.