எல்லாவற்றிலும் கவனம்
2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் சிந்தனைகள் நிதானமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லாததால் புதிய திட்டங்கள் யோசித்து வைத்திருந்தால் அதை செயல்படுத்துவதில் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். மேலும் உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறாது என்பதால் அவற்றை கொஞ்சம் தள்ளி வையுங்கள். எல்லாவிதமான உறவுகளையும் சரியாக வழிநடத்தி செல்லுங்கள். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை என்றாலும் உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நோயில் இருந்து விடுபடுவீர்கள். கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. லாபம் இல்லை. அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஏதாவது ஒன்றில் லாபம் கிடைக்கிறது என்றால் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையற்ற செலவினங்கள், விரயங்கள், நஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். பேச்சின் மூலமாக வருமானங்கள் இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவினங்களும் நிறைய இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.