பயணத்தில் எச்சரிக்கை

Update:2024-12-17 00:00 IST

2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கிறது. முயற்சிகள் வெற்றியடைய பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். தேவையில்லாத குழப்பங்கள், சிந்தனைகள் வேண்டாம். இந்த வாரத்தில் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம் உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களுடைய பணம் மொத்தமாக முடங்கிக்கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கிடைக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் இருவரும் பிரிந்து போக வாய்ப்புள்ளது; அல்லது திருப்தியாக மனநிலையில் இருப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் பரவாயில்லை. நிலுவையில் உள்ள பணங்கள் தவணை முறையில் வந்து சேரும். போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்