காதலில் மகிழ்ச்சி
2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
12-ஆம் இடத்தில் அத்தனை கிரகங்களும் உங்களை பார்ப்பதால் இந்த வாரம் முதலீடு, விரயம் இரண்டுமே உள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களின் ஞாபக சக்தியை அதிகப்படுத்துங்கள். சுய முயற்சியில் பெரிய அளவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களின் எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியான சிந்தனைகளை வெளிப்படுத்துங்கள். வீடு, இடம் மாற நினைத்தவர்களுக்கு மாற்றங்கள் உண்டு. எதிர்பாராத பயணம் அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. தொழிலை பொறுத்தவரை சுமார். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் முழுவதும் முருகனையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள்.