தேவையில்லாதவற்றில் தலையிடாதீர்கள்

Update:2024-11-26 00:00 IST

2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். செய்ய வேண்டியதை எது முதல், எது இரண்டாவது என்று தெரிந்து, கால தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். எடுக்க நினைக்கும் முடிவுகளை இந்த வரமே எடுங்கள். கிரக நிலைகள் நன்றாக இருக்கும் பொழுது நம்மை நாமே முன்னேற்றிக்கொள்ள வேண்டும். முயற்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள். வீடு, இடம், ஊர் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். புதிதாக சொத்துக்கள் வாங்குவீர்கள். வீடு மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் நன்றாக உள்ளது. ஷேர் மார்க்கெட், ஆன்லைன் பிசினஸ் ஆகியவை பரவாயில்லை. டிரேடிங் செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். ஆனாலும், யூக வணிகங்கள் ஏதோவொரு வகையில் உங்களுக்கு கை கொடுக்கும். குழந்தைகளால் நற்பலன்கள் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் உங்களை விட்டு பிரிந்து போவார். இந்த வாரம் முழுவதும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்