துணிந்து செயல்படுங்கள்

Update:2024-11-12 00:00 IST

2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரத்தை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. ஆனாலும், செலவினங்கள் உண்டு. சகோதர - சகோதரிகள் இருந்தால் அவர்களுக்காக செலவு செய்யுங்கள். உங்களின் முயற்சிகள், எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் நன்மையாக வந்து சேரும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேவையில்லாத சிந்தனைகள் வேண்டாம். சில விஷயங்களில் துணிந்து செயல்படுங்கள். யாருக்கு கடன் கொடுத்தாலும் அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. வீடு, இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய இடம், புதிய சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகவோ, அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவோ வாய்ப்புகள் உள்ளன. வேலை, வாய்ப்புகள் சிறப்பாக இருக்கின்றன. பணி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் தனித்து இருக்கக்கூடிய முருகனை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்