சுறுசுறுப்பாக இருப்பது நல்லது

Update:2024-10-29 00:00 IST

2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் நினைப்பது நடக்கும்; அதற்கான சூழ்நிலைகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் ஆக்டிவாக இருங்கள். சோம்பேறித்தனத்தை தவிருங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. வேலையில் எதிர்பாராத பயணம், சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு ஓத்துழைப்பு தருவதில் சிக்கல் இருக்கிறது. அதனால், உங்கள் வேலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், பிளாட்பார தொழில் செய்பவர்கள் அத்தனை பேருக்கும் நல்லதொரு வருமானம் இருக்கிறது. குழந்தைகளால் ஒருபக்கம் நன்மை; இன்னொருபக்கம் தேவையற்ற பிரச்சினைகள், மன வருத்தங்கள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கொஞ்சம் பொறுமை, நிதானமாக இருங்கள். கலைத்துறையும் சுமார்தான். யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. சிந்தித்து செயல்பட்டால் எதிர்காலம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் பெண் தெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்