எதிரிகளை வெற்றி கொள்வீர்கள்

Update: 2024-10-21 18:30 GMT

2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் பார்க்கும் வேலையில் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். ஒருபக்கம் வேலையில் பிரச்சினை, இன்னொருபக்கம் வேலையால் நன்மை என இரண்டுமே இருக்கிறது. உங்கள் வேலையில் மற்றவர்களுடன் பழகும்போது கவனமாக பேசி பழகுங்கள். யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை கவனிப்பதற்கான வாரமாக இது இல்லை. தேவையில்லாத குழப்பங்கள் உங்களுக்கு வேண்டாம். சில விஷயங்களை துணிந்து செயல்படுத்துங்கள். வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அதே சமயம் உங்களுக்கு மூன்றாம் இடத்தில் சனி பகவான் வக்கிரமாக இருப்பதால் யோசித்து செயல்படுவது முக்கியம். சொத்து, இடம் உள்ளிட்டவற்றை விற்க வாய்ப்புகள் உண்டு. வீடு, இடம், ஊர் மாறுவதற்கான சூழ்நிலைகளும் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை மற்றும் வருமானம் இருக்கிறது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். உங்களுடைய நேரடியான, மறைமுகமான எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். இந்த வாரம் முழுவதும் அம்பாளையும், மகாலட்சுமியையும் தரிசனம் செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்