எதிரிகளை வெற்றி கொள்வீர்கள்

Update: 2024-05-13 18:30 GMT

2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டதாகதான் இருக்கும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. இதுவரை வேலை இல்லாதவர்கள், வேலை தேடினால் நிச்சயம் கிடைக்கும். எந்த துறையில் பணியாற்றினாலும் பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். உங்கள் வேலையில் வெற்றியை, நல்லதொரு முன்னேற்றத்தை அடைவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். உங்களின் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். பெண் வேலையாட்களை எதிர்பார்த்து காத்திருந்தால் இந்த வாரம் அமைவார்கள். நீண்ட நாட்களாக வீடு, இடம், வண்டி, கார், நிறைய வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றை வாங்க நினைப்பவர்கள் லோன் பெற்று வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில் பெரிதாக லாபம் இல்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். வாரம் முழுவதும் சிவ தரிசனம், பெருமாள் வழிபாடு செய்து வந்தால் இன்னும் நற்பலன்கள் கூடும்.

Tags:    

மேலும் செய்திகள்