முயற்சிகள் வெற்றி பெறும்

Update:2024-09-17 00:00 IST

2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் வேலை நன்றாக இருப்பது போன்ற தோற்றம் இருக்குமே தவிர நிறைய தடைகள் இருக்கின்றன. உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெரிய அளவில் இருக்காது. அவர்களும் வேலையில் உங்களுக்கு தடையாக இருப்பார்கள். அதனால் உங்கள் வேலையில், கவனமாக இருங்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் காத்திருங்கள். இந்த வாரத்தில் ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். வரவில்லை என்றால் சந்தோஷமடையுங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் வெற்றிபெறும். இன்டர்வியூவில் கலந்து கொண்டால் தேர்வு ஆவீர்கள். உங்களின் தேடுதல் என்பது பெரிய அளவில் இருக்கும். அந்த தேடுதல் வெற்றியை தரும். விற்பனையாகாத உங்களின் சொத்துக்கள் விற்பனையாக வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சுமாரான அளவில் வருமானங்கள் இருக்கின்றன. இந்த வாரம் முழுவதும் முருகரையும், நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்