முயற்சிகள் வெற்றியடையும்

Update:2024-08-13 00:00 IST

2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், டிஜிட்டல் துறை, மீடியா துறை இப்படி எது தொடர்பாக தொழில் செய்தாலும் இந்த வாரம் பரவாயில்லை. வேலையை பொறுத்தவரை வேறு அலுவலகம் மாற வேண்டும், பேப்பர் போட வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். யாரிடமாவது கடன் கேட்டிருந்தால் கிடைக்கும். என்ன காரண காரியத்திற்காக கடன் கேட்டிருந்தீர்களோ அது அத்தனையும் பூர்த்தியாகும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் நன்மையாக இருக்கும். உங்களை பெரிய அளவில் டெவலப் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பகுதி நேரமாகவோ, ஆன்லைனிலோ, கரஸிலோ படிப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளது. விற்பனையாகாத சொத்துக்களை விற்கவும், புதிதாக வாங்கவும் என வாங்கி, விற்க வேண்டிய வாய்ப்புகள் உள்ளது. உங்கள் கௌரவம் கூடும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. அதிலும் அந்நிய மொழி பேசும் நண்பர்களால் சகாயம் ஏற்படும். முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். இந்த வாரம் முழுவதும், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.       

Tags:    

மேலும் செய்திகள்