வேலையில் கவனம்
2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். இதுவரை இருந்த மன குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனை உண்டாகும். அதனால் தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். அப்படி நீங்கள் எடுக்கக் கூடிய முடிவுகள் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், எந்த ஒரு செயலையும் பின்வாங்காமல் துணிந்து செயல்படுங்கள். இந்த வாரம் உங்களுக்கு வருமானம் அதிகமாக இருப்பதை போலவே செலவினங்களும் ஏற்படும். உறவுகளால் நற்பலன்கள் உண்டு. உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு லாபங்கள் உண்டு. மார்கழி மாதமாக இருந்தாலும் சொந்தமாக நிலம் வாங்குவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வேலையில் கவனம் அவசியம். தொழில் முன்னேற்றம் ஏற்படும். விசா, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த வாரம் அவை கிடைக்கும். பெருமாள் மற்றும் சிவனை வழிபட்டால் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும்.