உறவுகளிடம் கவனம்

Update: 2024-07-08 18:30 GMT

2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் முயற்சிகள் அனைத்தும் ஓரளவுக்கு வெற்றி பெறும். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் கையில் பணம், தனம் இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் சாதகமாக இருக்கும். வீடு மாற்றங்கள், இடம் மாற்றங்கள் உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளது. உறவுகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட், கோல்டு பாண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான விஷயங்கள் நடப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் உண்டு. மதிப்பு மரியாதை கூடும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மென்ட், டூர் ஆகியவை இருக்கின்றன. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷமும் உண்டு. வேலையை பொறுத்தவரை ஒரு திருப்தியில்லாத மனநிலை ஏற்படும். அடிப்படையிலேயே இந்த மனநிலையை மாற்றினால் அது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை, முன்னேற்றத்தை தரும். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் துர்கையையும், காளியையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்