நட்பை மேம்படுத்துங்கள்

Update:2024-10-01 00:00 IST

2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. முயற்சி செய்ய கூடிய காரியங்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலைகளும் பரவாயில்லாமல் இருக்கும். கையில் பணம், தனம் என்பது இருக்கும். பேங்க் பேலன்ஸ் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். பெரிய அளவில் பண்ணக் கூடிய காரியங்கள் உங்களுக்கு நன்மையை தரும். அரசு, தனியார் என எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் உங்கள் கெரியர் நன்றாக உள்ளது. வேலையில் பொருளாதாரம், மானிட்டரி பெனிஃபிட்ஸ், சம்பள உயர்வு, ட்ரான்ஸ்ஃபர் போன்ற உங்கள் எதிர்பார்ப்புகள் எதுவாக இருந்தாலும் பூர்த்தியாக வாய்ப்புகள் உள்ளன. சிறு தொழில், சுயதொழில் எதுவாக இருந்தாலும் சுமாராக உள்ளது. பெரிய முதலீடுகள் எதுவும் வேண்டாம். அதனால் லாபம் வருவது போன்ற எந்த தோற்றமும் இல்லை. நண்பர்களை விட்டு நீங்கள் பிரியவோ அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரியவோ வாய்ப்புகள் இருப்பதால் நட்பை மேம்படுத்துங்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வி நன்றாக உள்ளது. உயர் கல்வியில் மட்டும் சின்ன சின்ன தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாரம் முழுவதும், சிவனையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்