காதலில் வெற்றி
2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் எண்ணம், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். ஒவ்வொரு காரியங்களிலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாதார வசதிகள் நன்றாக இருந்தால் முதலீடு செய்யுங்கள். அப்படியில்லை என்றால் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். அதுதவிர உங்கள் காதல் வெற்றியடையும். காதலில் பிரிவு இருந்தால் கூட மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது. ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் போன்ற எந்தவிதமான யூக வணிகங்களில் முதலீடு செய்தாலும் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள். மேலும், காளியை தரிசனம் செய்யுங்கள்.