புதிய வரவு
2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கையில் பணம், பொருள் இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையற்ற செலவினங்கள், விரயங்கள், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. புதிய முயற்சிகள் எடுப்பதில் பொறுமை, நிதானம் தேவை. இன்னும் சில நாட்களில் இப்போது இருக்கும் நிலைகள் மாறும். உறவுகளை சரியாக மெயின்டைன் செய்யுங்கள். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். அதனால் ஏமாற்றங்கள் உண்டாகும். எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் நார்மல் இன்வெஸ்ட்மென்ட் செய்யுங்கள். ஓரளவு ரிட்டன்ஸ் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானங்கள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய வரவு வருவதற்கான வாய்ப்பு உண்டு. யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி, துர்க்கை மற்றும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.