காதலில் போராட்டம்
2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கடந்த வாரத்தை போலவே உங்கள் ராசிநாதன் மூன்றாம் இடத்தில் இருப்பதால் இயற்கையாகவே தெய்வ அனுகூலம் இருக்கிறது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருக்கும். அதேநேரம், அதற்கு ஏற்ற செலவுகளும் இருக்கிறது. மனைவி அல்லது உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டிய காலமாக உள்ளது. வேலை, வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. உங்களின் அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். புதிதாக தொழில் நிறுவனம் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத மகிழ்ச்சி, சந்தோஷம், பிரச்சினை இரண்டுமே இருக்கிறது. காதல் விஷயங்களில் நிறைய போராட்டங்கள் இருக்கின்றன. நட்பு வட்டாரத்தை மெயின்டைன் செய்யுங்கள். அவர்களால் நன்மை, சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இவை அனைத்தும் இருக்கிறது. தொழில் நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் இதர பெண் தெய்வ வழிபாட்டையும் அதிகப்படுத்துங்கள்.