மணவாழ்க்கையில் மகிழ்ச்சி

Update:2024-08-13 00:00 IST

2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நிலுவையில் உள்ள பணங்கள் வராமல் இருந்தால் வந்து சேரும். முன்னோர்களுடைய சொத்துக்கள் கிடைக்கும். கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு பணம் ஏதும் வர வேண்டி இருந்தாலும் வரும். இது எதுக்குமே வாய்ப்பு இல்லை என்பவர்களுக்கு பி.எப், அரியர்ஸ், பென்ஷன், இன்சூரன்ஸ் ஆகிய பணங்கள் ஏதும் வராமல் இருந்தால் வந்து சேரும். இதுதவிர எதிர்பாராத பணவரவு, பொருள் வரவும் இருக்கிறது. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்கவும், குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளது. தொழில் மற்றும் வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. ஒருபக்கம் வேலையை பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக வேலை இல்லாமல் இல்லை. கண்டிப்பாக உண்டு. எந்த வேலை பார்த்தாலும் எதிர்பார்த்த சம்பாத்தியங்கள், முன்னேற்றங்கள் இருக்கும். அவசரம், அவசியம் இருந்தால் தவிர கடன் வாங்காதீர்கள். ஏனென்றால் பின்னாளில் பெரிய அளவில் வட்டி கட்ட வேண்டிய ஒரு காலகட்டத்தை உருவாக்கும். இந்த வாரம் உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். இதுவரை காதல் ஏதும் இல்லை என்றால், புதிதாக காதல் மலர வாய்ப்புள்ளது. முறிந்த காதல் சேரும். இந்த வாரம் முழுவதும் இறையருளை கூட்டி முழுமுதற் கடவுளாம் விநாயகரையும், முருகனையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்