முயற்சிகள் வெற்றியடையும்
2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். நீங்கள் நினைத்தது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வரும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி இவை அனைத்தும் இருக்கிறது. சகோதர - சகோதரிகளால் நன்மை, உறவுகளால் நற்பலன்கள் ஆகியவையும் உண்டு. உங்களின் லட்சியத்தை அடைய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உள்ளன. நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு ரூபத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் தொடர்புகொள்ள நினைப்பவர்களுடன் நேரடியான தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள். விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். வீடு, இடம் ஊர் மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கும் அது அமைய வாய்ப்பு உண்டு. வேலையை பொறுத்தவரை பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும், நல்ல சம்பாத்தியத்தையும் கொடுக்கும். சம்பள உயர்வு, பணி உயர்வுக்கும் வாய்ப்புகள் உள்ளன. எது எப்படி இருந்தாலும் இந்த வாரத்தில் உங்களின் விருப்பம், ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாகும். கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். மூத்த சகோதர - சகோதரிகளால் நற்பலன்கள் ஏற்படும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அவசியம் இருந்தால் தவிர கடன் வாங்காதீர்கள். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.