காதலில் மகிழ்ச்சி
2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. வேலை, வாய்ப்புகள் சுமாராக இருப்பதால் செய்யும் வேலையை பொறுமையாகவும், நிதானமாகவும் செய்யுங்கள். எல்லோரிடமும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கிறது. அதற்கு தகுந்த எதிர்பாராத செலவினங்களும் இருக்கின்றன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. வருமானங்கள் சுமார். கடன் கொடுப்பதை தவிருங்கள். வேலை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.